Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரா? நிதிஸ்குமார் விளக்கம்

Advertiesment
பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரா? நிதிஸ்குமார் விளக்கம்
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:07 IST)
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் போட்டியிடுவது குறித்து முதல்வர் நிதிஸ்குமார் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது.  இதில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு  160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால்,  நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் அவர் அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின்போதே நிதிஸ்குமார், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என தகவல் வெளியானது.

எனவே வரும் 2024 ஆம் ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில்  நிதிஸ்குமார் போட்டியிடுவார் என கூறப்படும்  நிலையில், இதற்கு நிதிஸ்குமார் பதில் அளித்துள்ளார்.

தன்படி,  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  நான் போட்டியிடவில்லை; ஆனால், 2025 ஆம் ஆண்டு சட்டப்பேர்வை தேர்தல் தேஜஸ்வி தலைமையில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் திருமணத்தில் நடந்த தகராறு! வைரலாகும் வீடியோ