Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை வரை நீளும் Lockdown 4.0?

Advertiesment
ஜூலை வரை நீளும் Lockdown 4.0?
, வியாழன், 14 மே 2020 (13:16 IST)
ரயில் சேவைகள் ஜூன் 30 வரை ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு ஜூலை வரை நீளுமா என கேள்வி எழுந்துள்ளது. 

 
ஆம், ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் ரயில்கள் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் 30 வரை பயணிகள் முன்பதிவு செய்திருந்த அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, டிக்கெட் கட்டணத்துக்கான முழுத்தொகையும் பயணிகள் வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள், மே 12 ஆம் தேதி துவங்கிய பயணிகள் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முந்தினம் மக்களிடம் ஊரடங்கு காலத்தில் 5வது முறையாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 உடன் முடிவடைய இருக்கின்ற சமயத்தில் பேசிய பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், அது முந்தைய ஊரடங்கிலிருந்து வேறுபட்டு இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
நான்காவது ஊரடங்கில் உள்ள மாற்றங்கள் 18 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்ச கோடி திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு விவரித்து வருகிறார். 
 
அதோடு தற்போது ஜூன் 30 வரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ஜூன் 30 வரை ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு ஜூலை 30 வரை நீளுமா என கேள்வி எழுந்துள்ளது. 
 
இதன் மூலம் நான்காம் கட்ட ஊரடங்கு முன்பை போல 2 வாரங்களுக்கு இல்லாமல் ஒரு மாதம் முழுவதுமாக இருக்குமா என அச்சமும் எழுந்துள்ளது. நாளுக்கு நாள் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகுவது நான்காம் கட்ட ஊரடங்கை நினைத்து கலக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள்: நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தீர்மானம்