Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஆர்சிடிசி வலைதளம் திடீர் முடக்கம்: தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாமல் அவதி..!

irctc

Mahendran

, வியாழன், 26 டிசம்பர் 2024 (12:50 IST)
ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி வலைதளம் திடீரென முடங்கியதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஆர்சிடிசி வலைதளம் திடீரென முடங்கியதாகவும், அந்த தளத்தை பயன்படுத்த முயன்ற பயணிகளுக்கு "பராமரிப்பு பணி காரணமாக சேவை பெற முடியாது. மீண்டும் முயற்சிக்கவும்" என்ற மெசேஜ் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பராமரிப்பு பணி குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் எந்த அப்டேட்டும் இதுவரை பயணிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஐஆர்சிடிசி சமூக வலைதள பக்கத்திலும் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகள் தங்கள் டிக்கெட் சார்ந்த சந்தேகங்களுக்கு 14646, 080-44647999, 080-35734999 ஆகிய கஸ்டமர் கேர் எண்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்க பயணிகள் குவிந்து வருவதாக தெரிகிறது. மேலும், வலைதளம் மட்டும் இன்றி மொபைல் செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று பயணிகள் குற்றம் கூறி வருகின்றனர். இது குறித்து விரைவில் ஐஆர்சிடிசி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க கீழ்த்தரமான செயல்: அண்ணாமலை