ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில், கடந்த மாதம் மூன்று முறை தொடர்ச்சியாக இணையதள சர்வர் முடங்கியதால் பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், டிசம்பர் மாதம் மூன்று முறை ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கிய நிலையில், இன்று ஆண்டின் தொடக்க நாளான புத்தாண்டிலும் இணையதளம் முடங்கி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்
விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த பயணிகள் தட்கல் முறையில் டிக்கெட் எடுக்காமல் தவித்ததாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இதனை அடுத்து, முன்பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு பல பயணிகள் சென்றதாகவும், ஆனால் அங்கும் பல மணி நேரம் காத்திருந்துதான் கடும் சிரமத்திற்கு பிறகு முன் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. டிசம்பரில் இருந்து இதுவரை நான்கு முறை ரயில்வே இணையதள சர்வர் முடங்கி விட்டதாக ரயில்வே துறைக்கு ஏராளமான மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில், ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.