ரயிலில் பயணம் செய்யும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஐஆர்சிடிசி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரயில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு உணவு வழங்குவது ரயில்வே நிர்வாகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உணவு சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய உணவு வகைகளை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
இதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்பு உணவுகள் ஆகியவைகளை பயணிகள் தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணிகள் கட்டணத்தில் உணவு கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே உணவு கட்டணங்கள் செலுத்தி தேவையான உணவுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது