துப்பாக்கியை சுத்தம் செய்போது, தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சசிகுமார், தலையில் குண்டு பாய்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012ஆம் ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார் ஐ.பி.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் கர்னூல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்புதான், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படேரு என்ற நகருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை 6 மணியளவில், தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாரத விதாமாக வெடித்ததில், அவரது தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
அதை நேரில் பார்த்த அதிகாரி கூறும்போது “கண்டிப்பாக இது தற்கொலை இல்லை” என்று கூறியுள்ளர்.