Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு வரும் ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு

Manipur State
Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (12:58 IST)
மணிப்பூர்  மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு வரும் ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அங்குள்ள குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த நிலையில் இரு  வாரங்களுக்கு முன்பு இரு தரப்பினர் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

இதில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 230க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.

இந்த மாநிலத்தில் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக சமீபத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் செல்லவிருந்த நிலையில் இங்கு புதிதாக வன்முறை வெடித்ததில், 6  பேர் உயிரிழந்ததாகவும்  12 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இணையதள சேவை மே 3 வரை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments