Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை- மாநில அரசு அனுமதி

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (19:34 IST)
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு இணையதள சேவை வழங்க மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை   பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே திடீர் வன்முறை ஏற்பட்டது.

அந்த மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கும்பல் சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ பரவலான நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். இன்று 7 வதாக மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூரில்  கடந்த மே மாதம் வன்முறை வெடித்ததால், கலவரம் பரவாமல் தடுக்க வேண்டிய இணையதள சேவை முடக்ககப்பட்டது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு இணையதள சேவை வழங்க மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

வாய்ப்பளித்தால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன்.. பதவி எதுவும் தேவையில்லை: ஓபிஎஸ்..!

’ஆபரேஷன் ஈகிள்’ கஞ்சா வேட்டை.. ஐடி ஊழியர்கள் உள்பட 14 பேர் கைது..!

சிகரெட் வார்னிங் போல் ஜிலேபி, பகோடாவுக்கும் வார்னிங்.. மத்திய அரசு அதிரடி முடிவு..!

பட்டாசு ஆலை விபத்து எதிரொலி! சோதனைக்கு பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments