Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி; இண்டர்நெட் சேவை திடீர் நிறுத்தம்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (08:28 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜெயிஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயிஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு தீவிரவாதி பேசியுள்ளான். இந்த வீடியோ காஷ்மீர் பகுதியில் அதிகளவில் வைரலானதை அடுத்து தெற்கு காஷ்மீரில் இண்டர்நெட் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநகர் உள்பட முக்கிய பகுதிகளில் இணையதள வே‌கம், 2ஜியாக‌ குறைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும்‌ வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கு இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இருநாட்டின் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments