Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி

காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு:  27 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:37 IST)
காஷ்மீரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஒன்றில்  27 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயம் அடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் முதலில் 12  சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் படுகாயம் அடைந்த பல வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. மேலும் காயமடைந்த 40 வீரர்களில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

webdunia
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மீண்டும் ஒரு சர்ஜிகல் அட்டாக் நடத்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள் - மத்திய அமைச்சர் பேச்சு