Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் இணையதள சேவை முடக்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (16:40 IST)
விவசாய போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம்
 
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். தற்போது நிலைமை கைமீறிப் போன நிலையில் போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கிய விவசாயிகள் டெல்லி முழுவதும் பேரணியாக சென்று டெல்லி செங்கோட்டையின் உச்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய கொடியை ஏற்றினர். 
 
இதையடுத்து போலீசார் அவர்களை கலைக்களப்புடன் களைந்து செல்ல கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் போராட்டம் கைமீறி சென்றதையடுத்து அமைதி நிலவ 
டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது பிரச்னைகளுக்கு தீர்வாகுமா? என கேள்வி எழுந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments