Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பட்ஜெட் தாக்கல்

Advertiesment
பட்ஜெட்
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (08:36 IST)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மத்திய மோடி அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறது.
 
2019-20-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆளுங்கட்சியான பாஜக 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகின.
 
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கலாம். அப்படி இருக்க இந்த முழுக்கால பட்ஜெட் தகவல் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் மட்டுமே எனப் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
 
வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.
 
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம் விவசாயிகள். ஏனென்றால் அவர்கள் மோடி அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். இது நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபளித்திடக் கூடாது என்பதற்காக விவசாயிகளை கவரும் விதத்தில் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படலாம். வருமான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படலாம். 
 
மே மாதத்தோடு ஆளும் பாஜகவின் பதவிக்காலம் முடிவடைவதால், அடுத்ததாக பதவி ஏற்கும் அரசின் பட்ஜெட் தாக்கலிலே பல அம்சங்கள் இருக்கும். ஆக இந்த பட்ஜெட்டில் பெரிய அளவிலான சலுகைகளோ, திட்டங்களோ இருக்காது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் பாஜகவின் பதவிக்காலம் முடிவடைவதால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு, நடுத்தர மக்களின் சுமையை போக்க சலுகைகள், சிறு குறு வணிகர்களுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட்டா ? இடைக்கால பட்ஜெட்டா ? – விளக்கமளித்த மோடி