Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு..

Advertiesment
சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு..

Arun Prasath

, வியாழன், 31 அக்டோபர் 2019 (12:41 IST)
சிதம்பரம் சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட நிலையில் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிகிச்சைக்காக 3 நாள் இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போது சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்றி எரிந்த பாகிஸ்தான் ரயில்: பயணிகள் ஓட்டம்; 46 பேர் பலி!