Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கி கடனுக்காக வட்டி மீதான வட்டியை தள்ளிபடி செய்ய முடியாது - சொலிசிட்டர் ஜெனரல்

வங்கி கடனுக்காக வட்டி மீதான வட்டியை தள்ளிபடி செய்ய முடியாது  - சொலிசிட்டர் ஜெனரல்
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:42 IST)
சீனாவில் இருந்து கொரொனா தொற்று உலகம் எங்கும் பரவியுள்ளது. இதனால் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  கொரொனா காலத்தில் வீட்டுத் தவணை, கடன் தவணைகளுக்குகாக விலக்கு வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தத்தை அடுத்து அரசு, ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கடன் தவணைகளை கட்ட வேண்டாம் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு கட்டலாம் என சில தளர்வுகள் அறிவித்தது.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென  சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷால் மேத்தா, ஊரடங்கு காலத்தில் வங்கி கடனுக்காக வட்டி மீதான வட்டியை தள்ளிபடி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை கடன் தொகை கட்டாதவர்களின் கணக்குகளை வராக் கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் இதற்கான மறு உத்தரவு வரும்வரை பட்டியலில் சேர்க்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே... பலே ஆஃபர்களுடன் வோடபோன் புதிய ரீசார்ஜ்!!