Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”கோ பேக் மோடி” ட்ரெண்ட் செய்தது பாகிஸ்தானா? – அதிர்ச்சியளிக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

Advertiesment
”கோ பேக் மோடி” ட்ரெண்ட் செய்தது பாகிஸ்தானா? – அதிர்ச்சியளிக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!
, சனி, 12 அக்டோபர் 2019 (14:07 IST)
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் ட்ரெண்ட் செய்யப்படும் “கோ பேக் மோடி” என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானிலிருந்து பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உச்சி மாநாட்டிற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக ’கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாக்கப்பட்டது. இதை எதிர்த்து பலர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிரதமர் தமிழகம் வந்தபோது பல்வேறு அரசியல் பிரச்சினைகளால் எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்திருந்தனர்.

ஆனால் இந்த முறை அப்படி யாரும் பிரதமருக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையிலும் இந்த ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. இதுகுறித்த ஆய்வு மேற்கொண்ட உளவுத்துறைக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ட்ரெண்டிங் செய்யப்பட்ட ஹேஷ்டேகில் வெறும் 2 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவிடப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகளில் இருந்து இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாம்.

தமிழகத்தில் கணிசமாக இருந்த மோடி வெறுப்பை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப பாகிஸ்தான் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”மாயமில்லை, மந்திரமில்லை”.. கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து மிரளவைத்த மாணவி