Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு ஆயுதம் எதுவும் வாங்க வேண்டாம்! – முப்படைகளுக்கு கடிதம்!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:50 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதம் வாங்குவதை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்திய ராணுவத்தின் ஆயுத தேவைகளுக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் முந்தைய காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளது இந்தியா. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் மருத்துவ பணிகளுக்கு நிதி ஏராளமாக தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி பற்றாக்குறை ஏற்படுவதால் அரசு பல்வேறு வகைகளில் நிதியை சேகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆயுதங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முப்படைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ராணுவ நிதியையும் கொரோனா பாதிப்புகளுக்கு செலவளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments