Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நோயாளிகளை தேடி பிடிக்கும் நாய்கள்! – பலிக்குமா இங்கிலாந்து திட்டம்!

கொரோனா நோயாளிகளை தேடி பிடிக்கும் நாய்கள்! – பலிக்குமா இங்கிலாந்து திட்டம்!
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:19 IST)
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தேடி பிடிக்க நாய்களுக்கு பயிற்சியளிக்கும் முயற்சியில் இங்கிலாந்து ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா இங்கிலாந்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைகளை துரிதப்படுத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டாலும், தொடர்ந்து புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தேவையான மருத்துவ ஊழியர்களும் குறைவாக இருப்பதால் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதிலும் கால தாமதம் ஏற்படுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களை கண்டுபிடிக்க நாய்களை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தலாமா என்பது குறித்து இங்கிலாந்து யோசித்து வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே மலேரியா மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நாய்களை பயிற்சி அளித்து இங்கிலாந்து போதிய அளவு வெற்றிக் கண்டுள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் நாய்களை பயிற்சியளிப்பது அவசியம் என பார்க்கப்படுகிறது.

இதற்காக “லேப்ரடார்” வகை நாய்களில் மூன்று வகையை பயன்படுத்தலாம் என்றும், இவற்றிற்கு பயிற்சி அளிக்க 6 முதல் 8 வாரங்கள் ஆகு. இதற்கு 5 லட்சம் பவுண்டுகள் செலவாகும் என ”மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி”யின் தலைவர் க்ளாரியா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியா? விஜய்யா? கொலை வரை சென்ற வாக்குவாதம்!