Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா எம்பியாக நியமனம்!

Advertiesment
sudha murthy

Sinoj

, வெள்ளி, 8 மார்ச் 2024 (14:38 IST)
இன்போசிஸ்  நிறுவனர்  நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மேல் சபை எம்.பி.யாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தியாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸ். இந்த நிறுவனம் உலகளவில் ஐடி துறையில் முன்னணி  நிறுவனமாக உள்ளது.
 
இந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர்   நாராயண முர்த்தியின் மனைவி சுதா மேல் சபை எம்.பியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  நியமித்துள்ளார்.
 
இந்த நிலையில், இவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்திருப்பதாக குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
அதில், மா நிலங்களவையில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகளிர் சக்தியை  பிரதிபலிப்பதாக இருக்கும் என்றும், சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்; அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 
மேல்சபை எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சுதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது,.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக காங்கிரஸ் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை..! ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!