Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக காங்கிரஸ் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை..! ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு..!

Advertiesment
dmk congress

Senthil Velan

, வெள்ளி, 8 மார்ச் 2024 (14:22 IST)
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
 
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் அந்தந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. இதுவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம், சிபிஐ, கொங்கு தேசிய மக்கள் கட்சி ஆகியவைகளில் தங்கள் தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிபிஎம், சிபிஐக்கு தலா 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விசிகவுக்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. கூடுதல் தொகுதிகளை கேட்டதால் காங்கிரஸ் திமுக இடையே இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தையின் போது திமுக காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை கடத்தல் சம்மந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை! -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்