வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

Siva
திங்கள், 8 டிசம்பர் 2025 (18:15 IST)
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டு நெருக்கடி இன்று ஏழாவது நாளாக தொடர்ந்தபோதும், அதன் விமான சேவைகள் 90% சரியான நேர செயல்திறனுடன் இயங்க தொடங்கியுள்ளன. இன்று மட்டும் இண்டிகோ 1,800 விமானங்களை இயக்கியுள்ளது.
 
எனினும், இன்று ஆறு மெட்ரோ விமான நிலையங்களிலிருந்து மட்டும் 562 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பெங்களூருவில் இருந்து 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
இந்த நெருக்கடிக்கு விமான பணி நேர வரம்புகள் விதிமுறைகளுக்கு ஏற்ப ஊழியர் சுழற்சியை மாற்றி அமைக்க இண்டிகோ தவறியதே காரணம் என்று கூறப்படுகிறது.
 
மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இது இண்டிகோவின் உள் நிர்வாகச் சிக்கல் என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 3 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்காக ரூ.827 கோடி ஏற்கெனவே திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்றும், பயணத் திட்டங்களை மாற்ற விரும்புவோருக்கு கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. 
 
சில விமானிகளின் கூற்றுப்படி, FDTL விதிமுறைகளை தவிர்ப்பதற்காகவே இண்டிகோ வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments