2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (10:51 IST)
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த இரண்டு நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததாலும், பல விமானங்களை தாமதப்படுத்தியதாலும் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளது.
 
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் நவம்பரில் அமலுக்கு வந்த புதிய விமான பணிக்கால வரம்பு கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த சேவைச் சீர்குலைவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. FDTL விதிமுறைகள் விமான பணியாளர்களின் ஓய்வு நேரத்தை அதிகரித்துள்ளதால், விமானிகள் பற்றாக்குறை தீவிரமடைந்தது.
 
ஏர்பஸ் ஏ320 விமானங்களுக்கான அவசர மென்பொருள் புதுப்பித்தல் கட்டாயம் ஏற்பட்டதும் நெருக்கடியை அதிகப்படுத்தியது. இண்டிகோவின் சரியான நேரத்தில் புறப்படும் செயல்திறன் செவ்வாய்க்கிழமை அன்று வெறும் 35 சதவிகிதமாக சரிந்தது. இந்த சரிவு குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் இண்டிகோவிடம் கோரியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த சேவை சீர்குலைவுக்கு இண்டிகோ மன்னிப்பு கேட்டுள்ளதுடன், தங்கள் விமான அட்டவணையில் தேவையான மாற்றங்களை செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments