Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஹானாவின் மதத்தைக் கூகுளில் தேடிய நபர்கள்!

Advertiesment
ரிஹானாவின் மதத்தைக் கூகுளில் தேடிய நபர்கள்!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:20 IST)
இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து டிவீட் செய்த பாப் பாடகி ரிஹானாவின் மதம் என்ன அவர் பாகிஸ்தானியரா என பலபேர் கூகுளில் தேடியுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து நேற்று பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தார். விவசாய போராட்டம் குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம் என்று அவர் பதிவு செய்திருந்தார்  

ரிஹானாவின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்திய பிரபலங்களான பாலிவுட் சினிமாக் காரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர் தலையிட வேண்டாம் என பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரிஹானாவின் மதம் என்ன? அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா என அதிகளவில் நேற்று முதல் பல பேர் தேட ஆரம்பித்துள்ளனராம். இந்த தேடல்கள் கூகுள் ட்ரண்ட்ஸில் இடம்பிடுத்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ யோசனை!