Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் .. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை..!

Advertiesment
drone
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:50 IST)
பாகிஸ்தானை சேர்ந்த மர்மமான ட்ரோன் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு அத்துமீறி நுழைந்த நிலையில் அதனை பாதுகாப்பாக அதிகாரிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் என்ற பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் பறந்து வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்திய நிலையில் அந்த ட்ரோன் வயலில் அறுவடை செய்யும் நிலத்தில் விழுந்ததாகவும் அதை கிராம மக்கள் மீட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து அந்த பகுதிக்கு சேர்ந்த பாதுகாப்பு படையினர் அந்த ட்ரோனை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அமிர்தசரஸ் என்ற பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்தது என்றும் அதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மறித்து சோதனை செய்தபோது போதை மருந்து பாக்கெட்டுகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள ட்ரோனில் என்னென்ன இருக்கிறது என்பதை குறித்து பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசின் இலவச திருமண நிகழ்ச்சியில் கர்ப்ப பரிசோதனை: 4 பெண்கள் கர்ப்பம் என தகவல்..!