அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் – எய்ம்ஸ் விரையும் பிரமுகர்கள்

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாகி வருவதால் இன்று அவரை சந்திக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் முக்கிய உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டவர் அருண் ஜெட்லி. தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார் அருண் ஜெட்லி.

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த அருண் ஜெட்லி கடந்த 9ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் இணை அமைச்சர் ஆகியோர் இன்று காலை அவரது உடல்நிலையை காண சென்றுவந்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவரை இன்று மருத்துவமனைக்கு பார்க்க செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments