Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:47 IST)
அடுத்த ஐந்து நாட்களில் இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது என்பதும், இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
எனவே மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
மேலும் வெப்பத்தின் தாக்கத்தை தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments