அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பிய ஒரு விமானம் பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரத்தில் இறங்கியது. இதில் 116 இந்தியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 33 பேர் ஹரியானா, 8 பேர் குஜராத், 3 பேர் உத்தரப்பிரதேசம், 2 பேர் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.
மேலும், மெக்சிகோ வழியாகவும் மற்ற சில நாடுகளின் வழியாகவும் அமெரிக்காவுக்கு இவர்கள் ஊடுருவியதை அடுத்து, அவர்களுடைய பாஸ்போர்ட்டை நாட்டு அதிகாரிகள் கிளித்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மற்றொரு விமானம் மூலம் 157 எம்பி விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது.