Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

Advertiesment
border security

Siva

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (17:46 IST)
கடந்த வாரம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை  வீரர் பூர்ணம் சாஹு தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து சிக்கியுள்ளார். 
 
பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பணியில் இருந்த சாஹு, அருகிலிருந்த விவசாயிகளுடன் பயணித்தபோது ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தன்னறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்துவிட்டதாக BSF தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை கைது செய்துள்ளனர். தற்போது ஆறு நாட்களாக அவரிடம் தகவல் இல்லை என்பதுடன், அவரது குடும்பம் பெரும் கவலையில் இருக்கிறது.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடும் கேள்விகளுடன் எதிர்கொண்டு வருகிறது. சாஹுவின் மீட்பு தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும், அவரை பாதுகாப்புடன் மீட்பதற்கான திட்டங்கள் என்னவென்றும் கேட்டு இருக்கிறது.
 
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒட்டு கேட்டால் தவறில்லை: பெகாசஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி..!