Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமர்நாத் யாத்திரையில் கன்னிவெடி வைத்த பாகிஸ்தான்?- இந்தியா அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்

அமர்நாத் யாத்திரையில் கன்னிவெடி வைத்த பாகிஸ்தான்?- இந்தியா அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (17:19 IST)
அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்களை தாக்குவதற்காக பாதைகளில் பாகிஸ்தான் வைத்த கன்னிவெடிகளை கண்டுபிடித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள மக்கள் வருடத்தில் ஒருமுறை அமர்நாத் புனிதயாத்திரை செலவது வழக்கம். இந்தமுறை வழக்கத்தைவிட அதிகபேர் அமர்நாத் புனித யாத்திரை சென்றுள்ளதாக “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்நிலையில் அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதையடுத்து யாத்திரை செல்லும் பாதையில் மூன்று நாட்கள் தீவிர சோதனையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. அப்போது பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் கன்னிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுறுவ செய்ய பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த முயற்சிகளை முறியடித்து எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித யாத்திரை சென்ற மக்களை குறிவைத்து நடக்க இருந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளதை மக்கள் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் எல்லையில் பதட்டமும் அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காகிதப் பயன்பாட்டை படிப்படியாக குறைப்போம் - சபா நாயகர்