Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காபியா ? பியரா ? டீயா ? - இணையத்தில் உலாவரும் பதிவு !

Advertiesment
காபியா ? பியரா ? டீயா ? - இணையத்தில் உலாவரும் பதிவு !
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:24 IST)
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன கபே காபி டே கடையின் நிறுவனர் சித்தார்த்தாவின் மரணத்தை பலவாறானப் பதிவுகள் இணையத்தில் உலாவர ஆரம்பித்துள்ளன.

பிரபல கஃபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் மாயமான அவர் நேத்ராநதி ஆற்றில் இருந்து அவரத் உடல் பிணமாக மீட்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. அவரது 20 அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ஏற்கனவே சோதனை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணத்தை ஒட்டி சமூகவலைதளங்களில் பலப் பதிவுகள் உலாவந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில பதிவுகள் வைரலாகப் பரவி வருகின்றன.

பதிவு ஒன்று.
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ரிலாக்ஸாக காபி டேயை உருவாக்கியவர் இப்போது மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முரண்.

பதிவு இரண்டு
இந்தியாவில் பியர் விற்றவர் கடன் தொல்லையால் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். காபி விற்றவர் கடன் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் டி விற்றவரோ நாட்டுக்கே பிரதமராகி விட்டார். அதனால் இப்போது முடிவு செய்யுங்கள், பியரா ? காபியா ? இல்லை டீயா ?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது: அதிரடி உத்தரவு