Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

கிழக்கு லடாக் எல்லையில் கத்தி, கம்புகளுடன் சீன படையினர் - இதுவரை வெளிவராத படங்கள் - உண்மை என்ன?

Advertiesment
bbc
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (23:56 IST)
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ட்ஸோவின் தெற்கு கரைப்பகுதியில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி)அருகே சீன படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதியில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட கம்புகளுடன் துப்பாக்கி ஏந்திய சீன படையினர் நிற்கும் படங்கள் வெளிவந்துள்ளன.

ஆனால், இந்த படங்களின் நம்பகத்தன்மை, அவை எங்கே எடுக்கப்பட்டன போன்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், அது பற்றிய சிறப்புத் தகவல்களை வழங்குகிறோம்.

இந்த படங்கள் எங்கு எடுக்கப்பட்டன?

சுமார் 25 சீன படையினர், துப்பாக்கிகள் கீழ்நோக்கிய நிலையில் நிற்பதை படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை கைத்தடியுடன் சேர்த்துப்பிடித்துள்ளனர்.

எப்போது எடுக்கப்பட்டன?

இந்திய அரசின் உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, இந்த படங்கள் நேற்று (செப்டம்பர் 7) மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த படங்கள் எடுக்கப்பட்ட பகுதி மற்றும் நேரத்தை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

சீனா

படத்தில் இருப்பவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

இந்த படங்கள் கிழக்கு லடாக்கின் முகாபரி என்ற இந்திய கண்காணிப்புச் சாவடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் மறுபகுதியில் நிற்கும் சீன படையினர் இருக்கும் இடத்தில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்நிலை அரசு வட்டாரங்கள் இந்த படங்கள் எல்ஏசி பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறுகின்றன.

என்ன நடந்தது?

இந்திய கண்காணிப்புச் சாவடியை நோக்கி சீன படையினர் வர முயன்றபோது அவர்கள் எச்சரிக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது.

மேலும், சீன படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடப்போவதாக இந்திய படையினர் எச்சரித்ததாகவும், அதன் பிறகு அவர்கள் முன்னேறாமல் நின்று கொண்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை என்றும் இந்திய தரப்பு கூறுகிறது.

"சில சீன படையினர் பொதுவான பகுதியில் தற்போதும் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமானதாக அவர்கள் இந்திய கண்காணிப்புச்சாவடியை நோக்கி முன்னேறவில்லை" என்று அந்த வட்டாரம் மேலும் கூறுகிறது.

"செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது இந்த சீன படையினர்தானா அல்லது வேறு குழுவினரா என்பது தெளிவாகவில்லை. இந்த படம் வெளியான பிறகே சீன படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்" என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

பின்னணி என்ன?

செப்டம்பர் 7ஆம் தேதி, சீன வெளியுறவு அமைச்சகமும் சீன மேற்குப்படைப்பிரிவும், அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வரையறுக்கப்பட்ட பகுதியைக் கடந்து வந்து இந்திய படையினர் எச்சரிக்கும் விதத்தில் துப்பாக்கியால் சுட்டதாக குற்றம்சாட்டின.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் தரும் வகையில் இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "எல்ஏசி பகுதியில் எந்தவொரு கட்டத்திலும் இந்திய ராணுவம் அத்துமீறவோ துப்பாக்கிப்பிரயோகம் உள்பட முரட்டுத்தனமாகவோ நடந்து கொள்ளவில்லை" என்று கூறியது. மேலும், பரஸ்பரம் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறிய சீன படையினர்தான் முரட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர் என்று இந்திய ராணும் குற்றம்சாட்டியது.
அதேசமயம், இந்த விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் எல்ஏசி பகுதிகளில், பல தசாப்தங்களாகவே எச்சரிப்பதற்காகக் கூட துப்பாக்கியால் சுடவில்லை என்று உயர்நிலை வட்டாரம் கூறியது. அந்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் இருக்கக்கூடாது என்பது எல்லை சம்பிரதாய நெறியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அடுத்தது என்ன?

கடந்த சில வாரங்களாக எல்ஏசி பகுதியில் தொடரும் ஆத்திரமூட்டல்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்ஜியின் திரும்ப வருகிறதா? சீனாவுடன் உறவை முறித்துக் கொண்ட பப்ஜி நிறுவனம் !