Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதிகலங்கவைத்த சம்பவம்: பசிக்கொடுமையால் உயிரிழந்த 7 வயது சிறுமி

Advertiesment
பசிக்கொடுமை
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:54 IST)
கவுதமாலாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் பசிக்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமாலாவைச் சேர்ந்த நேரி ஹில்பெர்டோ கால் கஸ் தனது 7 வயது மகள் ஜாக்லின் காலுடன் கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் வேண்டி சக அகதிகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர். உணவின்றி நீண்ட தூரம் சென்ற சிறுமி மிகவும் களைப்புடன் இருந்தார்.
 
இந்நிலையில் அமெரிக்க எல்லைப்பகுதியில் அமெரிக்கா பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே மிகவும் களைப்புடன் இருந்த சிறுமி, போலீஸார் கைது செய்த பதற்றத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.
 
இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவின்றி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பலரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்!