இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் 122 ஆண்டுகள் கழித்து அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
அதேசமயம் திடீரென வங்க கடலில் உருவான புயலால் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இந்தியாவில் நிலவி வரும் வெப்பநிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள உலக வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வழக்கமாக மே, ஜூனில் வீசும் வெப்ப அலை இந்த முறை மார்ச் மாதத்திலேயே வீசத் தொடங்கியதாகவும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.