Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

Mahendran
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (17:16 IST)
இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஒருநாள் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கும் என்று ட்ரம்ப் கூறிய கிண்டலான கருத்துக்கு எந்தவித பதிலையும் அளிக்க இந்தியா மறுத்துவிட்டது.
 
இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
 
பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் அறிவித்த ட்ரம்ப், பாகிஸ்தான் தனது எண்ணெய் வளங்களை இந்தியாவுக்கு ஒருநாள் விற்கலாம் என்று கிண்டலாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், "நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை" என்றார்.
 
கடந்த காலத்தில் பல சவால்களை சந்தித்தபோதும் இந்தியா-அமெரிக்க உறவு வலுவாக உள்ளது என்று ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.  இந்த உறவு பல மாற்றங்களையும் சவால்களையும் தாண்டி வந்துள்ளது.  இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments