அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவு இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரப்படி:
மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 81,087 ஆக உள்ளது.
தேசியப் பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து 24,675 ஆக உள்ளது.
இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் கண்ட பங்குகள்:
ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முக்கியப் பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
இன்றைய பங்குச் சந்தையில் சரிவு கண்ட பங்குகள்:
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், மாருதி, சன் ஃபார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த புதிய வர்த்தக வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தின் மீது உடனடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது சந்தையின் நிலவரத்திலிருந்து தெரிகிறது. இருப்பினும், வரும் நாட்களில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.