Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதிகள் கைகளில் ட்ரோன்கள்; உலகிற்கு ஆபத்து! – ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்!

பயங்கரவாதிகள் கைகளில் ட்ரோன்கள்; உலகிற்கு ஆபத்து! – ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்!
, புதன், 30 ஜூன் 2021 (08:11 IST)
ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன் வழி தாக்குதல் நடத்திய நிலையில் இதுகுறித்து இந்தியா ஐ.நா சபையில் பேசியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் ட்ரோன் மூலமாக இரட்டை வெடிக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இந்தியா. ஐ, நா சபையில் குரல் எழுப்பியுள்ளது. ஐ.நா சபையில் பேசிய இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே.கவுமுடி ” பயங்கரவாத செயல்களுக்கான பிரசாரம், ஆள்சோ்ப்பு, நிதி உதவி பெறுவது, தொழில்நுட்பங்களை தவறான பயன்படுத்துவது ஆகியவை பயங்கரவாத அச்சுறுத்தல்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவிலும், எளிதிலும் டிரோன்கள் கிடைப்பதால் பயங்கரவாத குழுக்கள் இதை வைத்து உளவு பார்ப்பது, ஆயுதங்கள் கடத்துவது, குறிப்பிட்ட இடத்தை தாக்குவது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அபாயகரமாகவும், சவாலாகவும் அமைந்துள்ளது.” என கூறியுள்ளார்.

மேலும் ” இதுபோன்ற சா்வதேச பயங்கரவாத சவால்களையும், தகவல் தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!