Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

Siva
திங்கள், 12 மே 2025 (07:50 IST)
கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம், அதாவது சனிக்கிழமை, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது.
 
இதனை அடுத்து எந்த பெரிய தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லை பகுதியில் எந்த வித தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவில்லை என்பதால், இந்திய  எல்லை மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Editd by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments