இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 4 நாட்கள் போர் நிலவரம் குறித்து இந்திய முப்படை தளபதிகளும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, வைஸ் அட்மிரல் ப்ரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா, லெப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
லெடினெண்ட் ஜெனரல் ராஜீவ்: பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி: தீவிர ஆலோசனைக்கு பிறகே பயங்கரவாதிகளின் இலக்குகள் அடையாளம் காணப்பட்டது. பயங்கரவாதிகளின் மீதான தாக்குதலில் மிகச்சரியாக இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்டது. முக்கிய பயங்கரவாதிகளான யூசுப் அசார், அப்துல் மாலிக் ஆகியோர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத முகாம்களைதான் நாம் தாக்கினோம். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆளில்லா விமானம், ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவ நிலைகளையும் தாக்க முயற்சித்தனர். பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களை இந்திய வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு தடுத்தது
இவ்வாறு அவர்கள் தெரிவித்ததுடன் இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைக்கோள் படங்களையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.
Edit by Prasanth.K