Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக். எதிராக அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா? ராஜ்நாத் சிங் சூசகம்!

Advertiesment
பாக். எதிராக அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா? ராஜ்நாத் சிங் சூசகம்!
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (17:35 IST)
அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது தேவைப்பட்டால் இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், 1974 ஆம் ஆண்டு, சிரிக்கும் புத்தர் என்ற தலைப்பில், முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில், அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
 
அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அதே பொக்ரானில், ஆப்ரேசன் சக்தி என்ற தலைப்பில், 5 அணுகுண்டு சோதனைகள், 2 நாட்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் எந்த ஒரு அணு ஆயுத சோதனையையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. 
 
அதோடு, அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்ற கொள்கையையும் பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அணு ஆயுத பயன்பாடு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
webdunia
இந்தியா அணு ஆற்றல் கொண்ட நாடாக மாறினாலும், யுத்தகால சூழலில், முதலில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற கோட்பாட்டில், உறுதியாக இருக்கிறது. 
 
இந்த கோட்பாட்டை இந்தியா கண்டிப்பாக கடைபிடிக்கும், ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தது இந்த கொள்கை மாறுபடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எதிர்ப்புகளை தாக்குதல் மூலம் வெளிப்படுத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸை காப்பாற்றிய சிறுவன் – குவியும் பாராட்டுகள்