இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வேலையிழப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் 1.5 கோடி இந்தியர்கள் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பணியாற்றியவர்கள் எண்ணிக்கை 390.79 மில்லியனாக இருந்த நிலையில் மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 375.45 ஆக குறைந்துள்ளது. கடந்த ஜூலை முதலாக இந்திய பொருளாதாரம் மீண்டு வந்த நிலையில் இந்த வேலையிழப்பு மீண்டும் பொருளாதாரத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.