உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக அறிமுகப்படுத்த நிலையில், வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில், அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதில் டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறது.
இதன்படி, காகிதமில்லா பணபரிமாற்றம் மக்களிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், உலகளவில் 2022 ஆம் ஆண்டில் டிஜிட்டல் வழி பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ''டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா 8.95 கோடி(46 சதவீதம்) என்ற அளவில் உள்ளதாகவும், பிரேசில் 2.92 கோடிப் பேரும், சீனா 1.76 கோடி பேரும், தாய்லாந்து 1.65 கோடிப் பேரும், தென்கொரியாவில் 80 லட்சம் பேரும் பயன்படுத்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளளது.