Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பாதிப்பு நாடுகள்- மேலேறிக் கொண்டே செல்லும் இந்தியா!

கொரோனா பாதிப்பு நாடுகள்- மேலேறிக் கொண்டே செல்லும் இந்தியா!
, ஞாயிறு, 7 ஜூன் 2020 (17:07 IST)
கொரோனா பாதிப்பில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸால் இன்று உலகமே தலைகீழாக மாறியுள்ளது. இந்த வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் இரு தினங்களுக்கு முன்னர் பாதிப்பு எண்ணிக்கை 2.3 லட்சத்தைத் தாண்டி இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6 ஆவது இடத்துக்கு சென்றது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9,971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி இந்தியா 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தள்ளி போகிறதா 10ஆம் வகுப்பு தேர்வு? அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை