உலகின் வலிமையான விமானப்படைகள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய விமானப்படை 3வது இடத்தை பிடித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் கப்பற்படை மற்றும் விமானப்படை வைத்துள்ள நிலையில் உலகின் சிறந்த விமான படைகளை வைத்துள்ள நாடுகள் குறித்து வேர்ல்ட் டைரக்டரி ஆப் மாடர்ன் மிலிட்டரி ஏர்கிராப்ட் என்ற அமைப்பு கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வை நடத்தியது.
இதில் உலகில் சக்தி வாய்ந்த விமானப்படையை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் இந்திய விமானப்படை இடம்பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. வல்லரசு நாடுகளை விட வலிமையான விமானப்படையை இந்தியா பெற்றுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.