Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்தியா அபார வெற்றி!

Advertiesment
இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்தியா அபார வெற்றி!
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (22:56 IST)
2016 ஆண்டிற்கான உலகக்கோப்பை கபடி போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.


 
 
இந்தியா உட்பட 12 நாடுகள் களந்துக்கொள்ளும் இப்போடியில், இன்று இங்கிலாந்து நாட்டை எதிர் கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் நட்சத்திர ரைடர் சந்தீப் நர்வால் மிக அருமையாக விளையாடி இந்தியாவிற்கு புள்ளிகளை பெற்றுத்தந்தார்.
 
மேலும், இந்தியாவின் டிஃபண்ஸ் ஆட்டகாரகளும் இங்கிலாந்து ரைடர்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர். ஆட்ட முடிவில், 69-18 என்ற புள்ளிகளின் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியை அடுத்து, உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியா குரூப் ’ஏ’ பிரிவில் 21 புள்ளிகள் எடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது. 25 புள்ளிகள் பெற்று தென்கொரியா முதல் இடத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்து கொடுமை!