Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் 1 லட்சத்தை தாண்டிய சிகிச்சை பெறுவோர்! – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

மீண்டும் 1 லட்சத்தை தாண்டிய சிகிச்சை பெறுவோர்! – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!
, வியாழன், 30 ஜூன் 2022 (09:49 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,34,52,164 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,25,116 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,28,22,493 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,04,555 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்! – எம்ஜிஆர் பேரன் ஆதரவு!