Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்! – எம்ஜிஆர் பேரன் ஆதரவு!

Advertiesment
Junior MGR
, வியாழன், 30 ஜூன் 2022 (09:41 IST)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எம்ஜிஆர் பேரன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக இளைஞரணி துணை செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமாகிய ஜூனியர் எம்ஜிஆர் “எம்ஜிஆர் வியர்வை சிந்தி உருவாக்கிய கட்சி இது. அதன் பின்னர் ஜெயலலிதாவால் காக்கப்பட்டது. ஜெயலலிதா அவர் இருக்கும் காலத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிதான் கட்சி பொறுப்புகளை அளித்தார். பன்னீர்செல்வமும் அதற்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் சீனியர். இருந்தாலும் பல இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தார். ஒற்றைத் தலைமை என்றால் அதை ஓபிஎஸ்க்குதான் அளிக்க வேண்டும். என்றாலும் பிரச்சினைகளை தவிர்க்க இரட்டை தலைமை என்பதே சரியானது” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின்கம்பி; 8 பேர் உடல் கருகி பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!