Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா தொற்று!

Advertiesment
கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா தொற்று!
, ஞாயிறு, 3 ஜூலை 2022 (10:06 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 16,103 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,11,711 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,199 பேர் ஆக உள்ளது. 
 
அதைப்போல கடந்த ஒரே நாளில் 13,929 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,65,519 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,10,652 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருக்கிற பிரச்சனைகள் போதாதா? சின்னவர் ட்ரோல் குறித்து உதயநிதி பேட்டி!