இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் பல மாநிலங்கள் ஆயிரத்தை தாண்டியுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 4,203 ஆக உயர்ந்துள்ள நிலையில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். 507 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து டெல்லியில் 2003 பேரும், குஜராத்தில் 1,743 பேரும், ராஜஸ்தானில் 1,478 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை தொடர்ந்து இரண்டாவது அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக இருந்த தமிழகம் 1,447 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,407 ஆக உள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 17,265 ஆக உள்ளது. 2,547 பேர் குணமடைந்துள்ள நிலையில் 543 பேர் உயிரிழந்துள்ளனர்.