காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காஷ்மீர் எல்லையில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பதுங்கு குழிகளை அமைத்து வைத்திருந்தது. அண்மையில் இந்திய எல்லையில் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்திய ராணுவம் காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள பாகிஸ்தான் பதுங்கு குழிகளை ஏவுகணைகளை வீசு அழிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி என சிலர் கூறி வருகின்றனர்.
நன்றி: Viral News Network