13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்: வழக்கை வாபஸ் வாங்க மிரட்டும் பள்ளி நிர்வாகம்!
13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்: வழக்கை வாபஸ் வாங்க மிரட்டும் பள்ளி நிர்வாகம்!
மும்பையில் பள்ளி ஒன்றில் படித்து வந்த 13 வயது மாணவியை அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது சம்பவம் கடந்த 2016 செப்டம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் வாங்க சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மகாத்மா காந்தி மிஷன் பள்ளியில் படித்து வந்த மாணவிகளை அங்கு பணிபுரியும் ஹரிசங்கர் சுக்லா என்ற ஆசிரியர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் 13 வயது மாணவி ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து சிபிஎஸ்ஈ தரப்பில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம் கர்ப்பமான மாணவிக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் வழக்கை வாபஸ் வாங்கும் படியும் பேரம் பேசியுள்ளது.
இதனையடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் பெறும்படி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியும், பலவித மிரட்டல்கள் விடுத்தும் நாங்கள் பணத்தை வாங்கவில்லை என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.