Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தி படத்திற்கு மரியாதை நிகழ்ச்சி.. ஆளுனர் துண்டு தீப்பிடித்ததால் பரபரப்பு..!

Advertiesment
காந்தி படத்திற்கு மரியாதை நிகழ்ச்சி.. ஆளுனர் துண்டு தீப்பிடித்ததால் பரபரப்பு..!

Mahendran

, புதன், 2 அக்டோபர் 2024 (12:36 IST)
மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்த போது, கேரளா ஆளுநர் தூண்டில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள சபரி ஆசிரமத்தில், இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி, கேரளா ஆளுநர் முகமது ஆரிப் கான் மரியாதை செலுத்தினார். 
 
அப்போது, அருகே விளக்கு ஏற்றப்பட்டதில் இருந்து, ஆளுநர் அணிந்திருந்த தூண்டில் தீப்பிடித்தது. சில வினாடிகள், ஆளுநருக்கு தூண்டில் தீப்பிடித்தது தெரியவில்லை. 
 
இந்த நிலையில், அவரது பாதுகாவலர்கள் உடனடியாக தீப்பிடித்ததை பார்த்ததும், விரைந்து வந்து ஆளுநரின் தோளில் இருந்த துண்டை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதனால், ஆளுநருக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்! என்ன காரணம்?